கோலாலம்பூர், ஏப். 2: மலேசியா வைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டு மனைவிகளையும் மூன்றே நிமிடங்களில் விவாக ரத்து செய்தார்.அவர் பெயர் ரோஸ்லன் இங்கா (44). அவருக்கு நோராயதி (46), மஸ்துரா (44) என்ற இரு மனைவி கள் இருந்தனர்.அந்த இரு மனைவிகளும் நல்ல தோழிகளாக இருந்தனர். தங்கள் கணவரை விவாகரத்து செய்ய இருவரும் சேர்ந்து முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி னர். இதையடுத்து நீதிமன்றத் துக்கு ரோஸ்லனும் அவரது 2 மனைவிகளும் வந்தனர். அங்கு இஸ்லாமிய சட்டப்படி அவர்கள் விவாகரத்து செய்து கொண்ட னர். தலாக் என்று மூன்று முறை கூறி தனது இரு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்தார். ஒரு பெண் தனது கணவரை விவாக ரத்து செய்வதாக தனது விருப்பத் தைத் தெரிவிக்கலாம். ஆனால் விவாகரத்தை அவரது கணவரோ அல்லது நீதிமன்றமோதான் அறி விக்க முடியும் என்று இஸ்லாமிய சட்டம் கூறுகிறது. ரோஸ்லனின் முதல் மனைவிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது மனை விக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.2001 ல் மூன்றாவதாக அவர் ஒரு பெண்ணை மணந்தார். சில மாதங்களிலேயே அந்த பெண்ணை அவர் விவாகரத்து செய்துவிட்டார்.தனது இரு மனைவிகளும் நல்ல தோழிகள் என்று எனக்கு தெரி யும். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் என்னை விவாக ரத்து செய்ய முடிவு செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார் ரோஸ்லன்.இவர் ஒரு தொழிலதிபர். தங்க ளுக்குத் தேவையான பணத்தை ரோஸ்லன் தராததால் அவரை விவாகரத்து செய்வதாக இரு பெண்களும் நீதிமன்றத்தில் தெரி வித்தனர்.
தினமணி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment