திருச்சி, ஏப். 2: சவூதி அரேபியா வில் தங்கிப் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கடந்த 8 மாதங்களாக ஊதியமின்றி அவதிப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் தங்கிப் பணி யாற்றிவரும் இந்தியர்கள், தமிழர் கள் கடந்த சில ஆண்டுகளாக பல் வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சவூதி அரேபியா வில் தங்கிப் பணியாற்றிவரும் இந்தி யர்களும், தமிழர்களும் கடந்த சில நாள்களுக்கு முன் அங்குள்ள இந்தி யத் தூதரகத்துக்குச் சென்று தங் கள் பிரச்னைகள் குறித்து முறை யிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி அங்குள்ள தமிழர் கள் அனுப்பியுள்ள மனு: சவூதி அரேபியா, ரியாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல நூறு இந்தியர்கள், குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பணிபுரிந்து வருகிறோம். ஒரே நிறுவனத்தினர் வெவ்வேறு பெயர்களில் 3 நிறுவ னங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களாக யாருக்கும் ஊதியம் அளிக்கவில்லை.
24 பேர் கொண்ட குழுவாக கடந்த ஜனவரி 24-ம் தேதி இந்தியத் தூதரகத்துக்குச் சென்று எங்கள் நிலைமையை விளக்கி மனு அளித் தோம்.
தொடர்ந்து, மார்ச் 27-ம் தேதி நாங்கள் பணியாற்றும் நிறுவனத் துக்குச் சென்று நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, எங்களை வழிநடத்திச் சென்ற 5 பேரை சவூதி குடியுரிமைக் காவலர்களை வைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.
மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்று மிரட்டினர். எங்களது பாஸ் போர்ட் உள்ளிட்ட ஆவணங் களை சவூதி குடியுரிமை அமைச்ச கத்தில் ஒப்படைத்து விட்டதாகக் கூறுகின்றனர்.
வேறுவழியின்றி மார்ச் 30-ம் தேதி மீண்டும் இந்தியத் தூதர கத்தை அணுகினோம். 6 மாதத் துக்கு செல்லத்தக்க அனுமதிச் சீட்டை எங்களுக்கு அளித்துள்ள னர்.
எந்தக் குற்றமும் செய்யாமல், நீதி கேட்டதற்காக சிறையில் அடைத் துள்ள 5 பேரை விடுவிக்கவும், சவூதி அரேபியாவில் பணியாற்றும் அனைத்துத் தமிழர்களையும் தமிழ கம் திரும்ப உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் வேண்டுகிறோம்'' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது.
மனுவுடன், சிறையிலிருக்கும் 5 பேரின் பெயர்கள், அவர்களின் பாஸ்போர்ட் எண்கள், சிறைச்சா லைக் கோப்பு எண்கள், இந்தியத் தூதரகத்தில் அளித்த மனு நகல் போன்றவற்றையும் அவர்கள், முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமணி
Wednesday, April 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment