Tuesday, April 1, 2008

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் 5 மாத கர்ப்பம்

மெல்போர்ன் : அமெரிக்காவில், பெண்ணாக இருந்து அரைகுறை ஆணாக மாறியவர், தான் 5 மாத கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஓரேகான் மாகாணத்தை சேர்ந்தவர் தாமஸ் பீட்டி.

இவர், "நியூஸ்.காம்' என்ற இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பெண்ணாக பிறந்த நான், மார்பக திருத்த சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டு, ஆணாக மாறினேன். எனினும், குழந்தை பிறப்புக்கு தேவையான உறுப்புகளை எனது உடலில் இருந்து அகற்றவில்லை.

எனது மனைவி நான்சி. 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையால், அவரது கர்ப்பபை அகற்றப் பட்டது. இதனால், குழந்தை பிறப்பு இல்லாமல், அவதிப்பட்டு வந்தார். எனது மனைவிக்காக, ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தேன். அதற்காக ஆணாக மாறும் ஹார்மோன் சிகிச்சை உட்பட பல நடைமுறைகளை நிறுத்தி விட்டேன். தற்போது நான், ஐந்து மாத கர்ப்பமாக உள்ளேன். இது எனக்கு இரண்டாவது கர்ப்பம்.

இதற்கு முன், கர்ப்பமாக இருந்த போது, மூன்று சிசுக்கள் வளர்ந்தன. எனது உயிருக்கு ஆபத்து என்பதால், அறுவை சிகிச்சை மூலம் அந்த சிசுக்கள் அகற்றப்பட்டன. இதை கேள்விப்பட்ட எனது சகோதரன், "நல்ல முடிவு' என்று மகிழ்ந்தான். குழந்தையை பெற்றெடுப்பது என்று நானும், எனது மனைவியும் மேற்கொண்ட முடிவை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர்கள் சிகிச்சை தர மறுக்கின்றனர்; உறவினர்கள் ஆதரவு இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் கிண்டல் செய்கின்றனர். இருந் தாலும், என் மனைவிக்காக, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பேன்.இவ்வாறு தாமஸ் பீட்டி கூறினார்.

Dinamalar

No comments: