பர்நவுல் (ரஷ்யா) : ராக்கெட் உதிரி பாகம் ஒன்று, தனது வீட்டு முற்றத்தில் விழுந்ததால், ரஷ்ய விண்வெளி நிறுவனத்திடம், 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் ஆடு மேய்க்கும் ஒருவர்.
ரஷ்யாவின் அல்டாய் பிராந்தியத்தில் கிர்லிக் என்ற கிராமத்தில் வசிப்பவர் போரிஸ் உர்மாதோவ். ஆடுகள் மேய்த்து வருகிறார். அவர் ஒரு நாள் இரவு தனது குடிசையில் துõங்கிக் கொண்டிருந்த போது, முற்றத்தில் ஏதோ ஒரு பொருள் பயங்கரமாக வெடிப்பது போன்ற சப்தம் கேட்டது. அவருக்கு இரவில் சரியாக கண் தெரியாது என்பதால், என்ன நடந்தது என்பதை உடனடியாக பார்க்க முடியவில்லை.
காலையில் எழுந்து பார்த்த போது, தனது குடிசையின் முன்புறத்தில், உலோகத்தினாலான ஒரு பெரிய பொருள் விழுந்து கிடப்பதை கண்டார். அது முட்டை போன்று மிகவும் மென்மையாக இருந்தது. இருப்பினும், அந்தப் பொருள் விழுந்ததில், குடிசையின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்திருந்தது. விசாரித்த போது, அது கஜகஸ்தானில் உள்ள ராக்கெட் ஏவுதளத் தில் இருந்து அனுப்பப் பட்ட ராக்கெட்டின் பாகம் தான் என தெரியவந்தது.
இதையடுத்து, ராக்கெட் பாகம் விழுந்ததன் மூலம் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ் கோஸ்மாஸ் ஏஜென்சி மீது அவர் வழக்குத் தொடர்ந் துள்ளார். தனக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உர்மாதோவ் வசிக்கும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்களும், "தங்கள் கிராமங்களில் அடிக்கடி ராக்கெட் பாகங்கள் விழுவதாகவும், அப்படி விழும் பாகங்களில் சில மென்மையானவையாகவும், சில கடினமான உலோகங்களாகவும் உள்ளன. சில நேரங்களில் இன்ஜின் போன்ற கனமான பொருட்கள் விழுகின்றன' என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஸ்கோஸ்மாஸ் நிறுவனம் இதுபற்றி கூறுகையில், "நாங்கள் ராக் கெட்டை விண்ணில் செலுத்தும் போது, இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியே செல்ல வேண்டாம்; பாதுகாப்பாக இருந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுப்போம். கடந்த 50 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை செலுத் தியுள்ளோம். அதில், ஒரு சில ராக்கெட்டின் பாகங்கள் மட்டுமே, மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துள்ளன' என, தெரிவித்துள்ளது.
Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment