முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் 800 வருடங்கள் பழைமையான பிரதி யொன்று லண்டனில் இடம்பெற்ற ஏல விற்பனையொன்றில் 1,140,500 ஸ்ரேலிங் பவுணுக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.
தங்க எழுத்துக்களில் எழுதப்பட்ட மிக வும் பழைமையான முழுமையான குர்ஆனாக கருதப்படும் இந்நூலானது 1203 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.
அத்துடன் இந்நூலில் வெண்கல நிறத்தினாலான குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க ஹிஸ்பானிக் சபையின் ஏற்பாட்டில் விற்பனை செய்யப்பட்ட இக்குர்ஆன் பிரித்தானிய வாணிப சமூகத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment