Sunday, April 6, 2008

ஆசிரியையை தாக்க திட்டம் : 9 வயது சிறுவர்கள் கைது

அட்லான்டா: வகுப்பு ஆசிரியரை தாக்க திட்டமிட்ட மாணவர்கள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்கள்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள வேகிராஸ் நகரில், ஆரம்பப் பள்ளியில் மூன்றாவது படிக்கும் மாணவர்கள், தங்கள் வகுப்பாசிரியையை தாக்க திட்டமிட்டனர். ஒரு வாரமாக கூடிப் பேசி திட்டம் வகுத்தனர்.

பள்ளி ஆசிரியை தப்பிக்க முடியாதபடி, கைவிலங்கிட்டு, கத்த முடியாதபடி, அவரது வாயை அடைத்து, பேப்பர் வெயிட்டால் தலையில் தாக்குவது தான் அவர்களின் திட்டம். இதற்காக, உடைந்து போன இறைச்சி வெட்டும் கத்தி, கைவிலங்கு, எலக்டிரிக் டேப் ஆகியவற்றை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.

இதை பார்த்துவிட்ட இன்னொரு மாணவன், ஆசிரியையிடம் "போட்டுக்' கொடுத்துவிட்டான். சிறுவர்களின் இவ்வளவு பெரிய சதித்திட்டத்தைக் கேட்டு, பள்ளி நிர்வாகம் அரண்டுவிட்டது. மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சில மாணவர்கள் பல மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மூன்று பேர் மட்டும், கத்தி, கைவிலங்கு வைத்திருந்ததற்காக போலீசில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம், சிறுவர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

No comments: