Sunday, April 6, 2008

போலி மத குரு மருத்துவமனையில் அனுமதி

பெக்காவோவ்: உலகம் அழியப் போகிறது எனக் கூறி, சீடர்களுடன், ஐந்து மாதங்களாக பதுங்கு குழியில் தங்கிருந்த போலி மத குரு, தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் இருப்பது பெக்காவோவ். இப்பகுதியை சேர்ந்தவர் பயோடர் குஷ்னெட்சோவ். தன்னை மத குரு என, கூறிக் கொண்ட இவருக்கு நுõற்றுக்கணக்கான சீடர்கள் உண்டு. உலகம் விரைவில் அழியப்போகிறது என, சீடர்களிடம் குஷ்னெட்சோவ் கூறினார். இதை நம்பிய 35 சீடர்கள், அவருடன் ஐந்து மாதங்களாக பதுங்கு குழியில் தங்கி இருந்தனர். இவர்களில் 24 பேர், கடந்த வாரம் பதுங்கு குழியில் இருந்து வெளியேறினர். கடும் மழையால், பதுங்கு குழி அழிந்து வருகிறது என, காரணம் கூறினர்.

இதன் பிறகு, தலையில் பலத்த காயங்களுடன், பதுங்கு குழியில் இருந்து வெளியேறி குஷ்னெட்சோவ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பதுங்கு குழியில் இன்னும் 11 பேர் உள்ளனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

No comments: