இஸ்லாமாபாத்: கள்ளக்காதலில் ஈடுபட்ட ஜோடியை, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பழங்குடி மக்கள், கல்லால் அடித்து கொன்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியைச் சேர்ந்தவர் ஷானு. திருமணமான பெண். பாரா என்ற இடத்தைச் சேர்ந்த தவ்லத் கானும், ஷானுவும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் 15ம் தேதி தவ்லத் கான், ஷானுவை கடத்தி சென்று விட்டதாக, ஷானு குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள, நவ்ஷெரா என்ற பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், இந்த ஜோடியை, தலிபான் இயக்கத்தினர் சுற்றி வளைத்தனர்.
இருவரும் இஸ்லாமிய பெரியவர்களின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டனர். கள்ளக்காதலில் ஈடுபட்ட இருவரையும், கல்லால் அடித்து கொல்லும் படி பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, கவிசாய்பிசாய் என்ற இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர். ஷானுவின் உடல், அதே இடத்தில் புதைக்கப்பட்டது. தவ்லத் கானின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment