
திருவண்ணாமலை: ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் அபூர்வ நாயை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், வீட்டில் வெள்ளாடு வளர்த்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன் ஒரு குட்டியை ஈன்றது. இந்த குட்டிக்கு, கடந்த 10 நாட்களாக தாய் ஆடு, பால் கொடுக்காமல் குட்டியை விரட்டியடித்தது. இதனால், பால் கிடைக்காமல் பசியில் அலைந்த ஆட்டுக்குட்டிக்கு, பக்கத்துவீட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் வளர்த்த நாய் பாலுõட்டுகிறது. இந்த நாய் சமீபத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. இந்த நாய், அதனுடைய குட்டிகளுக்கு பால் கொடுப்பதுடன், ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடுக்கிறது. பசி எடுக்கும் போதெல்லாம், நாயிடம் பாலை குடிக்கிறது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
Dinamalar

No comments:
Post a Comment