Friday, April 4, 2008

மறதியால் வந்த விபரீதம்

Thursday, 03 April, 2008 11:25 AM
.
பெர்லின், ஏப்.3: ஆபரேஷன் செய்யும் போது மறதியாக ஊசியை வயிற்றுக்குள் வைத்து மருத்துவர்கள் தைத்து விட்டதாக விளையாட்டாக கூறு வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
.
ஆனால் ஜெர்மனியில் 60 வயது முதியவர் ஒருவரின் வயிற்றில் மருத்துவர்கள் நிஜமாகவே அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கருவி ஒன்றை மறந்து போய் வயிற்றில் வைத்து தைத்து விட்டார்களாம்.

ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் வயிற்று வலி குறையாமல் அதிகரித்ததால் அவதிப்பட்ட அந்த முதியவர் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் எந்த பலனும் கிட்டவில்லையாம்.

கடைசியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கிளாம்ப் என்ற கருவி அவரது வயிற்றுக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம்.

மாலைசுடர்

No comments: