Friday, April 4, 2008

பிணமாய் நடித்த திருடன்

Thursday, 03 April, 2008 11:27 AM .

மாட்ரிட், ஏப்.3: போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்கு மறைவிடத்தில் ஒளிந்து கொள்ளும் திருடர்களை பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். . ஆனால் ஸ்பெயின் நாட்டிலோ திருடன் ஒருவன் போலீசார் வருவதை கண்டு அவர்களிட மிருந்து தப்பிக்க பிணம் போல் நடித்தானாம்.

இறுதிச் சடங்குகளை நடத்தும் நிறுவனம் ஒன்றுக்குள் திருடச் சென்ற அவன், போலீசார் வருவதை அறிந்து கண்ணாடி சவப்பெட்டி ஒன்றுக்குள் பிணம் போல் படுத்துக் கொண்டானாம்.

ஸ்பெயின் நாட்டில் இறந்தவர் களின் உடல்களை அடக்கம் செய் வதற்கு முன் புத்தாடை அணிவிக்கப் படும். ஆனால் திருடனின் உடலில் இருந்த ஆடைகள் அழுக்காய் இருந்ததால் சந்தேகம் கொண்ட போலீசார் உற்று நோக்கியபோது அவன் மூச்சு விடுவது தெரிய வர இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறானாம்.

மாலைசுடர்

No comments: