Wednesday, April 9, 2008

ஆண்களின் துணையின்றி பெண்களுக்கு தாய்மை

செயற்கை விந்தணு கண்டுபிடிப்பு

ஆண்களின் துணையின்றி பெண்கள் கருத்தரிக்க வழிவகை செய்யக்கூடிய வகையில் , செயற்கை விந்தணுவை உருவாக்கும் ஆரம்ப கட்ட முயற்சியில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஜேர்மனிய விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஆரம்ப கட்டமாக பெண் எலியொன்றுக்கு செயற்கை விந்தணுவை உட்செலுத்தி வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டதாக ஜேர்மனியிலுள்ள கொட்டிங்கன் (Goettingen) பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பெண் எலியின் முட்டைக் கலத்திலிருந்து எடுக்கப்பட்ட 65 கலங்களில், ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை விந்தணுக்கள் உட்செலுத்தப்பட்டதாகவும் அவற்றில் 12 கருத்தரித்து பூரண நிலையை அடைந்ததாகவும் தெரிவித்த விஞ்ஞானிகள், இம்முறை மூலம் புதிதாக பிறந்த 7 எலிக்குஞ்சுகள் பிறந்து 3 நாளிலிருந்து 5 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் இறந்து விட்டதாக கூறினர்.

எனினும், அந்த எலிக் குஞ்சுகள் இறந்த மைக்கான காரணம் குறித்து தீர்மானிக்க முடியாதுள்ளதாக இவ்விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments: