Wednesday, April 9, 2008

16 இமெயில் கணக்குகளை ஒரே நேரத்தில் கையாள உதவும் eprompter

எத்தனை இமெயில் அக்கவுண்ட்டுகள் நாம் வைத்திருந்தாலும், நாம் அவற்றின் சேர்வர்களுக்குச் சென்று படிக்கவேண்டும். நாம் அவ்வாறு செய்யாமல், எப்படிப்பட்ட அக்கவுண்டாக இருந்தாலும், இணைய இணைப்பு கிடைத்தவுடன் சர்வர்களுக்குச் சென்று நம் இமெயில்களைத் தேடி, உங்களுக்கு இந்த இந்த அக்கவுண்ட்டில், இத்தனை இமெயில்கள் வந்துள்ளன என்று காட்டும் புரோகிராம் ஒன்று இ-புராம்ப்டர் (eprompter).இது ஒரு இலவசமான மென்பொருள்.

மொத்தம் 16 இமெயில் அக்கவுண்ட்களை பயன்படுத்தும் திறன் கொண்டது.

இதனைப்பெற

http://www.eprompter.com

என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவ சமாக டவுண்லோட் செய்து install பண்ண வேண்டும். அதன் பின்னர் emailஅக்கவுண்ட் செட்டிங்ஸ் பிரிவை இயக்கி, உங்களின் இமெயில் முகவரி பாஸ்வேர்ட் மற்றும் அதனைச் சார்ந்த தகவல்களை அளிக்க வேண்டும்.

இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை உங்கள் இமெயில்களைத் தேடிப் பெற வேண்டும் என்பதனையும், செட் செய்தால் இன்டர்நெட் இணைப்பில், உங்கள் கொம்ப்யூட்டர் இருக்கையில், eprompter ஒவ்வொரு இமெயில் இணைப்பிற்கான சேர்வரையும் தேடி, எத்தனை இமெயில் புதியதாக வந்திருக்கும் எனக்காட்டும்.

No comments: