Tuesday, April 15, 2008

ராஜிவ் படுகொலையில் பிரியங்கா சந்தேகம் என்ன?

நளினி வக்கீல் துரைசாமி கருத்து


"ராஜிவ் கொலை சம்பவத்தில், விடுதலைப் புலிகள்
மட்டுமல்லாமல், வேறு சக்திகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என பிரியங்கா
சந்தேகித்திருக்கலாம்' என வக்கீல் எஸ்.துரைசாமி கூறியுள்ளார்.

பிரியங்கா-நளினி உரையாடலின் மூலம் இவ்வாறு தான் கருதுவதாக அவர்
கூறினார். ராஜிவ் கொலை வழக்கில், நளினிக்காக வாதாடியவர் வக்கீல்
எஸ்.துரைசாமி. இவரது ஜூனியர் வக்கீல் இளங்கோவன். நளினியை பிரியங்கா
சந்தித்த தகவலை, வக்கீல் துரைசாமியிடம் நளினியின் தாயார்
தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது ஜூனியர் வக்கீல் இளங்கோவனை
வேலூர் சிறைக்கு அனுப்பியுள்ளார். அவரும் நளினியை சந்தித்து விவரங்களை
கேட்டறிந்தார். சிறையில் நளினி தன்னிடம் கூறியதை வக்கீல் இளங்கோவன்
நிருபர்களுக்கு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மார்ச் 19ம் தேதி மதியம் 12.30 மணிக்கு வேலூர்
சிறைக்கு பிரியங்கா வந்துள்ளார். முதல் மாடியில் உள்ள சிறை
கண்காணிப்பாளர் அறையில் இருந்துள்ளார். அங்கே நளினியை அழைத்து
வந்துள்ளனர். பிரியங்காவை பார்த்ததும் நளினி அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிரியங்கா உடன் வந்த டில்லி அதிகாரி பங்கஜ்குமார், அந்த இடத்தை விட்டு
சென்றுள்ளார். நளினியை பார்த்ததும் பிரியங்கா உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.
உடன் நளினியும் அழுதுள்ளார். "யார் சொல்லியும் வரவில்லை. உங்களை
பார்க்க வந்தேன்' என நளினியின் கையை பிடித்து பிரியங்கா கூறியுள்ளார்.

"எங்க அப்பா ரொம்ப நல்லவர். அவரை கொலை பண்ணிட்டாங்களே. எதுவா
இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்கலாமே. பிரச்னையை தீர்க்க
இது வழியில்லையே. இதற்கு யார் காரணம்? எதற்காக இது நடந்தது?
யாரெல்லாம் இதன் பின்னணியில் உள்ளனர்?' என நளினியிடம் பிரியங்கா
கேட்டுள்ளார். அதற்கு நளினி, "தனக்கு எதுவும் தெரியாது. தனுவுக்கு தான்
தெரியும். தனு சரித்திரம் படைக்கப் போகிறார் என சம்பவம் நடப்பதற்கு
மூன்று நிமிடங்களுக்கு முன்பாக சுபா கூறினாள்' என கூறியுள்ளார்.

Thinamalar

No comments: