Tuesday, April 15, 2008

எங்களுக்கு யார் மீதும் விரோதம் இல்லை

பிரியங்காவின் கருத் தையே ராகுல்காந்தியும் பிரதிபலித்தார். எங்கள் குடும்பத்தினருக்கு யார் மீதும் விரோதமோ வெறுப்போ இல்லை என்றார்.
நளினியை பிரியங்கா சந்தித்தது குறித்து தில்லி யில் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

உங்கள் சகோதரியைப் போல் நீங்களும் நளினியைச் சந்திப்பீர்களா என்று கேட்டபோது, இந்த விஷயங்களை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.
இதில் எனக்கு எந்த வகையிலும் பிரச்னை இல்லை என்றார் அவர்.
இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. எனது தந் தையின் கொலையாளியைப் பார்க்க வேண்டும் என்று பிரியங்கா விரும்பினார். கொஞ்ச நாள்களாகவே அவ ருக்கு இந்த எண்ணம் இருந்து வந்தது என்றார் ராகுல்.


நளினி மீது கோபமா?



விலைவாசிப் பிரச்னையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்க்கிழமைஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து அவையிலிருந்து வெளியேறி காரில் ஏறுகிறார் காங்கிரஸ்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி.

ராஜீவ்காந்தியை கொன்ற கொலைக் குற்றவாளி நளினியைபிரியங்கா சந்தித்தது பற்றி அப்போது ராகுலிடம் கேட்கப்பட்டது. "பகை உணர்வோடு பிரியங்காநளினியைச் சந்திக்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கு நளினி மீது கோபம் இல்லை' என்று அவர் கூறினார்.

No comments: