Thursday, April 17, 2008

பபிள்கம்

இன்று குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சுவைப்பது பபிள்கம். சாதாரணமாக நாம் தெருவில் நடக்கும்போது, பக்கத்தில் ஒருவர் மென்று கொண்டே நடப்பதை நம்மால் காணமுடியும்.

இன்னும் சிலருக்கு அது நீண்ட காலப் பழக்கமாக மாறி, பபிள் கம் மென்றுகொண்டே இருப்பர். அந்த அளவுக்குப் பிரபலமான பபிள்கம்மைக் கண்டுபிடித்தது எப்போது? யார் கண்டுபிடித்தது?

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர், பபிள்கம் என்ற ஒருவகை மிட்டாய் உலகில் இல்லை.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தோமஸ் ஆடம்ஸ் என்பவர் தான் பபிள்கம் எனும் மிட்டாயினை முதன் முதலில் வணிக ரீதியாக விற்பனைக்குக் கொண்டு வந்தார்.

அதற்கு முன்னரே தோன்றிய பபிள்கம் படிப்படியாகப் பல நாடுகளில் பல வளர்ச்சிகளைக் கண்டது. அவற்றினைத் தகவல் துளிகளாகக் காண்போம்.

· கிரேக்க மூதாதையர்கள் மேஸ்டிக் மரத்திலிருந்து வந்த ரெசினில் தயாரிக்கப்பட்ட மாஸ் டிஷ் எனும் மிட்டாயினைச் சுவைத்தனர்.

· வட அமெரிக்கப் பகுதியிலிருந்த செவ்விந்தியர்கள் ஸ்புரூஸ் மரங்களிலிருந்து வந்த திரவத்திலிருந்து மிட்டாய் தயாரித்து மென்றனர்.

· 1848ஆம் ஆண்டு ஜான் பி.கர் டிஸ் என்பவர் முதல் பபிள் கம்மைத் தயாரித்து ஸ்டேட் ஆஃப் மரைன் பியூர் ஸ்புரூஸ் கம் என்ற பெயரில் விற்பனை செய்தார்.

· 1850 ஆம் ஆண்டு ஸ்புரூஸ் கம்களுக்கு அடுத்ததாக வித்தியாசமான சுவைகளில் பாராஃபின்னில் தயாரிக் கப்பட்ட கம்களை கர்டிஸ் விற்கத் தொடங்கினார்.

· 1869ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வில்லியம் ஃபின்லே செம்பிள் என்பவர் முதன்முதலில் சூயிங் கம் தயாரிப்புக்கு உரிமம் வாங்கினார்.

· 1871ஆம் ஆண்டு தாமஸ் ஆடம்ஸ் முதல் இயந்திரத் தயாரிப்பு பபிள் கம்முக்கு உரிமம் வாங்கினார்.

· 1880ஆம் ஆண்டு ஜான் கால்கன் என்பவர் பபிள் கம்மில் நீண்ட நேரம் சுவையத் தக்க வைக்கும் முறையைத் கண்டுபிடித்தார்.

· 1888ஆம் ஆண்டு ஆடம்ஸ் தயாரித்த டுட்டு ஃபுரூட்டி பபிள் கம்கள் முதன்முதலில் தானியங்கி இயந்திரங்களில் விற்பனை செய்யப்பட்டது.

· 1899ஆம் ஆண்டு ஃபிராங் கிளின் வி.கேனிங் எனும் மருந்து விற்பனையா ளர் டெண்டைன் பபிள்கம்களை விற்பனை செய்தார்.

· 1906ம் ஆண்டில் தான் வாயால் ஊதி முட்டை வரவழைக்கக்கூடிய ரக பபிள்கம்கள் விற்பனைக்கு வந்தன.

இவற்றினை பிலிப்பர் பிளப்பர் கம் என்ற பெயரில் தயாரித்து ஃபிராங்க் ஃபிலீர் என்பவர் விற்பனை செய்தார்.

· 1914ஆம் ஆண்டு பிரபல சூயிங் கம் தயாரிப்பு நிறுவனமான ரிக்லி டபிள்மிண்ட் பிராண்ட் விற்பனைக்கு வந்தது. சிக்கிள் கம்களுடன் மிண்ட் மற்றும் பழச் சுவைகளைச் சேர்த்து, முதன் முதலில் வில்லியம் ரிக்லி மற்றும் ஹென் ஃபிலீர் இணைந்து தயாரித்தனர்.

· 1928ம் ஆண்டு ஃபிலீர் நிறுவனத்தில் பணிபுரிந்த டீமர் என்பவர் முதன்முதலாக பிங்க் நிற டபிள் பபிள் கம்மைத் தயாரித்தார்.

இது ஃபிலீர் தயாரித்த பிலிப்பர் பிளப்பரின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பே ஆகும்.

இதுபோன்று பல கட்டங்களில் பல மாறுதல்களைக் கண்டு வந்ததுதான் இன்று நாம் அனைவரும் வாங்கிச் சுவைக்கும் பபிள் கம்கள்.

No comments: