Thursday, April 17, 2008

சீனாவுக்கு தங்கக்கேடயம்

மரண தண்டனை நிறைவேற்றுவதில் சீனாவுக்கு தங்கக்கேடயம் மனித உரிமைகள் குழு

உலகளாவிய ரீதியில் கடந்த வருடம் அதிகளவு மரண தண்டனைகளை நிறைவேற்றிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த வருடம் 470 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேசமயம், இத்தொகையானது 8000 பேரிலும் அதிகமென மனித உரிமைகள் குழுவான "அம்னெஸ்டி இன்டர்நஷனல்' தெரிவிக்கிறது.

சீனாவில் பெருமளவு மரண தண்டனைகள் வெளியுலகிற்கு தெரியாவண்ணம் திரை மறைவில் நிறை வேற்றப்படுவதாக மேற்படி மனித உரிமைகள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

உத்தியோகபூர்வ அறிக்கைகளின் பிரகாரம் கடந்த வருடம் 24 நாடுகளில் குறைந்தது 1252 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 88 சதவீதமான மரண தண்டனைகள் சீனா, ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் நிறைவேற்றப் பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.

கடந்த வருடம் 51 நாடுகளில் சுமார் 3347 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இதன் பிரகாரம் தற்போது 27500 பேருக்கும் அதி கமானோர் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பல்லாயிரக்கணக் கானோருக்கு மரண தண்டனையை நிறை வேற்றியதன் மூலம் உலகளாவிய மரண தண்டனை நிறை வேற்றப் போட்டியில் தங்கக் கேடயம் பெறும் நிலையில் சீனா உள்ளது என "அம்னெஸ்டி இன்டர் நஷனல்' அமைப்பின் இங்கி லாந்துக்கான பணிப் பாளர் கேட் அலென் தெரிவித்தார்.

நம்பகரமான வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி சீனா வானது சராசரியாக தினசரி 22 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த கேட் அலென், ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற காலப்பகு தியில் 374 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சீனாவில் வரி மோசடி, பெறு மதி கூட்டப்பட்ட வரி ஆவணங்களை திருடுதல், மின்சார வசதிகளை சேதப்படுத்தல், போலியான மருந்துகளை விற்றல், லஞ்சம் பெறுதல், போதைப்பொருள் கடத் தல், கொள்ளை உட்பட 60 க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

No comments: