நடிகை ஸ்ரீதேவி மீது மும்பை பைனான்சியர் ஒருவர் செக் மோசடி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரீதேவி தயாரித்த சினிமாவுக்கு மதுகுப்தா என்ற பைனான்சியர் கடன் கொடுத்தார். இதற்காக ரூ.92.5 லட்சம், ரூ.8.41 கோடி, ரூ31.62 லட்சத்துக்கான 3 செக்குகளை குப்தாவுக்கு ஸ்ரீதேவி கொடுத்தார்.
இதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணமின்றி திரும்பி வந்தன. இதைத் தொடர்ந்து, மும்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குப்தா வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி, ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனிகபூர், ஸ்ரீதேவியின் மாமனார் சுரிந்தர்கபூர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி வழக்கு தொடர்ந்தார். அதில், மதுகுப்தா கொடுத்துள்ள செக்குகள் அனைத்தும் போலியானவை என்று ஸ்ரீதேவி தெரிவித்தார். அது பற்றி போலீசார் விசாரித்து முடிக்கும் வரை, கீழ் நீதிமன்ற நடவடிக்கை களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மதுகுப்தா மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "உயர் நீதி மன்றம் மிகவும் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்கு தடை விதித்து, கீழ் நீதிமன்றம் தனது விசாரணையை தொடர, அனுமதிக்க வேண்டும். ஸ்ரீதேவி கொடுத்த செக்குகள் அனைத்தும் கீழ் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது' என்று குறிப் பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment