
-செல்போனில் பரவும் கிளு கிளு காட்சி
“அலைபாயுதே’, `மொழி’ படங்களில் நடித்து பிரபலமானவர் சொர்ணமால்யா வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் அர்ஜன் என்பவரை மணந்தார். குறுகிய நாட்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திருமணத்துக்கு பின் சொர்ணமால்யா நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் கணவர் விரும்பவில்லை. எனவே விவாகரத்து பெற்று விலகினர். தற்போது பரதநாட்டி யம், நடிப்பு என பிசியாக இருக்கிறார். சொர்ணமால்யா இளைஞர் ஒருவரை முத்தமிடுவது போன்ற கிளுகிளு காட்சி செல்போன் இண்டர் நெட்டில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சொர்ணமால்யாவுக்கு முத்தம் கொடுப்பவருக்கு திருமணமாகி விட்ட தென்றும் குழந்தைகள் இருப் பதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகர செல்போன்களுக்கு இந்த கிளுகிளு படம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் சொர்ணமால்யா அதிர்ச்சியாகியுள்ளார்.
அவர் கூறியதாவது:- முத்தக்காட்சி படத்தை இன்னும் பார்க்கவில்லை. யாரோ விஷமிகள் கம்பியூட்டரில் என் தோற்றத்தில் போலி படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த படத்தினால் மன உளைச்சலில் இருக்கிறேன். நவீன தொழில் நுட்ப யுகத்தில் இது போன்ற காரியங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. வெங்கடேச திருக்கல் யாண காட்சியை தோழி ஒருவர் என் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். அதை பார்த்ததும் அதிர்ந்தேன். நடிகை படத்தை இது போன்று முத்தக்காட்சியில் இணைத்து வெளியிடுவது இழிவான செயல். நான் தைரியமான பெண். கலாசார பின்னணியில் இருந்து வந்துள்ளேன். என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். என் வாழ்க்கையில் என்னைப் பற்றி இதுவரை வந்த செய்திகளே போதுமானது. இது போன்ற சம்பவம் ஒரு கல்லூரி மாணவிக்கு ஏற்பட்டு இருந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. இவ்வாறு சொர்ண மால்யா கூறினார்.

No comments:
Post a Comment