Friday, April 4, 2008

கன்னிமரியாளும் அகதியானார்

இது உண்மையில் ஒரு வேதனையான விடயம்

சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று (03.04.08)அகற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று (04.04.08) ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது.

இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.

டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.

No comments: