Friday, April 4, 2008

நெப்போலியன் இறந்தது எப்படி?

ஆராய்ச்சியில் புதிய தகவல்

லண்டன், பிப். 12: பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப் போலியன், உணவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் பரவலான தகவல் உண்மையல்ல என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் மிகவும் புகழ்பெற்ற பேரரசனாக விளங்கிய மாவீரன் நெப்போலியனை, பிரிட்டன் படை, வாட்டர்லூ என்ற இடத்தில் 1815-ம் ஆண்டு தோற்கடித்தது. பின்னர் அவர் கைது செய்யப் பட்டு, செயின்ட் ஹெலினா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். 6 ஆண்டுகள் கழித்து தனது 52 வது வயதில் அங்கேயே அவர் இறந்தார்.

அவரது தலைமுடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தத் தலை முடி 1961 -ல் ஆராயப்பட்டது. அதில் விஷம் இருந்தது தெரியவந் தது. இதையடுத்து நெப்போலியனை பிரிட்டிஷ் அரசு விஷம் வைத்துக் கொன்றிருக்கலாம் என்று தகவல் பரவியது.

தற்போது இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள், அணுசக்தியைப் பயன்படுத்தி, நெப்போலியனின் முடியை மிகத் துல்லியமாக ஆராய்ந்தனர். நெப்போலியனைக் கொல்லும் அளவுக்கு அவரது முடியில் விஷம் இல்லை என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

அவர் சிறுவனாக இருந்தபோது அவரது முடியில் எந்த அளவுக்கு விஷத்தன்மை இருந்ததோ அதே அளவு விஷத் தன்மைதான் அவர் இறக்கும்போதும் அவரது முடியில் விஷத்தன்மை இருந்தது என்றும் இத்தாலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனவே நெப்போலியன் வயிற்று புற்றுநோயால் இறந்தார் என்று ஏற்கெனவே கூறப்பட்டுவந்த வாதத்துக்கு தற்போதைய முடிவு வலுசேர்த்துள்ளது.

No comments: