
பாரிஸ் மாகரம், தலாய் லாமாவுக்கு, கௌரவ பிரஜை என்ற அந்தஸ்தை வழங்க எடுத்துள்ள முடிவை, ஒரு முரட்டுத்தனமான தலையீடு என்று சீனா வர்ணித்திருக்கிறது. இந்த நடவடிக்கை விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் கோரியிருக்கிறது. இல்லாவிட்டால், இந்த நடவடிக்கை சீன பிரெஞ்சு உறவுகளை பாதிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.
திபெத் லட்சியத்துக்காக பல பிரெஞ்சு அதிகாரிகளும், நிறுவனங்களும், தங்களது ஆதரவை வெளிப்படுத்திவரும் நிலையில், இந்த நெருக்கடி, சீனாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகச்சமீபத்திய கருத்து வேறுபாடாகும்.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் , இந்த விஷயத்தில் அமைதி காக்குமாறும், பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரியிருக்கிறது.

No comments:
Post a Comment