
12 வயதில் ஆரம்பம்; 13ல் 4 பாட்டில் வைன்; 14ல் கல்லீரல் போச்சு
லண்டன் பள்ளிச்சிறுமிக்கு "தண்ணியில் ஆர்வம்; 12 வயதில் "அடிக்க" ஆரம்பித்தாள்; 13 வயதில், ஒரு நாளைக்கு நான்கு பாட்டில் வைன் குடித்தாள்; 14 வயதில், அவர் கல்லீரல் செயலிழந்துவிட்டது; "இனி குடித்தால் சாவு தான்" என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர். லண்டன் பள்ளி மாணவி நடாஷா பர்ன்ஹாம்; வயது 14. இவர் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டாக்டர்கள் பரிசோதித்தனர். கல்லீரல் முழுமையாக செயலிழந்து விட்டதை அறிந்தனர். "அதிகமாக மது குடித்து வந்ததால், கல்லீரல் கெட்டு விட்டது. இனி குடித்தால், மரணம் நிச்சயம்' என்று எச்சரித்து, சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து, மது குடிப்பதை விட்டு விட்டார் நடாஷா; உடல் நிலை தேறி வருகிறது.
நடாஷா, தன் மதுப்பழக்கம் பற்றி கூறியதாவது: எனக்கு 12 வயது இருந்த போது, என் தோழிகள், வார இறுதியில் விருந்து நடத்துவர்; ஓட்டலில் விருந்து முடிந்ததும், மது குடிப்பர். நான் முதலில் தயங்கினேன்; வேறு வழியில்லாமல் மது குடிக்க ஆரம் பித்த நான், அதில் அதிக நாட்டம் கொண்டேன். இதற்காக, என் பெற் றோர் தந்த "பாக்கெட் மணி" பணத்தை சேர்த்து, வார இறுதியில் குடிக்க ஆரம்பித்தேன். அதைத்தொடர்ந்து, தினமும் மது தேவைப்பட்டது.
ஓராண்டில் நான் தினமும், நான்கு பாட்டில் ஒயின் குடிக்க ஆரம்பித்தேன். இதையடுத்து, மது இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. தொடர்ந்து மது போதையில் வந்ததால் பள்ளியில் இருந்து நீக்கி விட்டனர். அப்படியும் என்பழக்கம் போகவில்லை. வீட்டில் பணம் திருடி குடிக்க ஆரம்பித்தேன்.
இப்போது எனக்கு 14 வயது. என் கல்லீரல் கெட்டு விட்டது என்று டாக்டர்கள் கூறினர். எவ்வளவு குடிப்பாய்? என்று கேட்டனர். ஒரு நாளைக்கு நான்கு பாட்டில் என்றதும் வியப்புடன் பார்த்தனர். இப்போது நான் மதுவை தொடுவதே இல்லை. என் நிலை, மற்ற பள்ளி மாணவிகளுக்கு பாடமாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு நடாஷா கூறினார்.

No comments:
Post a Comment