சகோதரி சீதாவை மணக்கிறார் ராமன் மலேசிய ராமாயணத்தில் இப்படி...
கவுகாத்தி : "தசரதன், மண்டோதரியுடன் குடும்பம் நடத்துகிறார்; ராவணனின் மகளும், தனது சகோதரியுமான சீதாவை, ராமன் திருமணம் புரிகிறார். ராமனும், சீதாவும் குரங்குகளாக உருமாறிய போது, அனுமான் பிறக்கிறார்' என்ன மண்டை குழம்புகிறதா. இது தான் மலேசிய ராமாயணம். கால மாற்றதுக்கு ஏற்ப, மலேசிய ராமாயணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
வால்மீகியால் ராமாயணம் எழுதப் பட்டது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா பகுதியை சேர்ந்த "ஜாவானிஸ்' என்ற மொழி பேசும் வர்த்தகர்களால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மலேசியாவில் ராமாயணம் அறிமுகமானது. "வயாங் குலிட்' என அழைக்கப்படும் பொம்மலாட்ட கலை மூலம் ராமாயணத்தை அறிமுகப்படுத்தினர். இதன் பிறகு மலேசிய ராமாயணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்படி, ராமனின் தந்தை தசரன், மண்டோதரியை திருமணம் செய்கிறார். வால்மீகி ராமயணத்தின் படி, ராவணனின் மனைவி தான் மண்டோதரி. மலேசிய ராமாயணத்தில், மண்டோதரி தன்னை போல ஒரு பெண்ணை உருவாக்கி ("குளோனிங்') ராவணனிடம் அனுப்புகிறாள். அவர்களுக்கு பிறந்த மகள் தான் சீதா. அவரை தான் ராமன் திருமணம் புரிகிறார். வனவாசம் செல்லும் போது, மந்திர சக்தி நிறைந்த குளத்தில் ராமனும், சீதையும் குளிக்கின்றனர்; குரங்குகளாக உருமாறுகின்றனர். அப்போது சீதா கருத்தரிக்கிறார். அந்த கருவை வாந்தியெடுத்து சீதா வெளியேற்றுகிறார். அதை ஒரு மீன் தின்றுவிடுகிறது. இப்படி தான் அனுமான் பிறக்கிறார். இது தான் மலேசிய ராமாயணம்.
மலேசிய ராமாயணம் இந்தியாவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்றே வரலாற்று நிபுணர்கள் கருதுகின்றனர். மலேசியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நுரியா முகமது இதை மறுத்துள்ளார். "வால்மீகி ராமாயணத்தை போலவே மலேசிய ராமாயணமும் நேர்மை, அன்பு, விசுவாசம், சுயநலமின்மை ஆகிய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது' என விளக்கம் அளித்துள்ளார். அதை "தெய்வம்' என்று மாற்றி குழப்பாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Friday, April 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment