Saturday, April 26, 2008

சிரியாவில் சந்தேகத்திற்கிடமான அணுச் செயற்பாடுகள் நடைபெறுகிறது

சமாதான நோக்கங்களுக்குப் புறம்பான அணுத்திட்டமொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக வடகொரியா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த அனுஆலைப் பிரதேசத்தின் மீது 2007ம் ஆண்டு இஸ்ரேல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டது.

சிரியாவின் இரகசிய அணு நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான தகவல்களை வெளியிடப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை கோரிக்கை விடுத்துள்ளது.

புளுட்டேனியத்தை உற்பத்தி செய்யக்ககூடிய அணுஆலை ஒன்று சிரிய அரசாங்கம் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை கிழக்கு பாலை வனப் பகுதியல் நிர்மாணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சிரிய அரசாங்கம் இதனை முற்றாக நிராகரித்துள்ளது.

No comments: