ஜோர்தானில் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றிபோது உயிரிழந்த நான்கு இலங்கைப் பெண்களது சடலங்கள் நேற்றைய தினம் (ஏப்ரல்24) கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றியோ எதனால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது பற்றியோ இதுவரையில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இவர்களில் ஒருவரது உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் இலங்கைப் பெண்கள் கொலை செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து அண்மைக்காலமாக மிக அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன.
மேலும், பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய பெண்கள் சம்பளப் பணம் எதுவுமின்றி நாடு திரும்பிய பல சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன.
இவ்வாறு நாடு திரும்பியவர்களில் சிலர் வாழ் நாள் முழுவதும் ஊனமாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளதென்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment