Thursday, April 24, 2008

சாதுக்கள் சவால் விடக் கூடாது

விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயற்சி செய்ய வில்லை என்று முதல்வர் கருணாநிதி மறுத்தார்.

தமிழ் செம்மொழி மையம் தாற்காலிகமாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காக மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய தமிழக அரசு நிர்பந்தம் செய் வதாக செய்திகள் வெளியாயின. அரசின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சட்டப் பேரவை வியாழக்கிழமை காலை கூடியதும் அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்னையை எழுப்பினர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்வர் கரு ணாநிதி பேசியதாவது: விவேகானந்தர் இல்லம் பற்றி நோட்டீஸோ கடிதமோ எழுதவில்லை. விவேகானந்தர் இல்லத்தை இடிப்பதாகவோ அல்லது புதிய இடத்துக்கு மாற்றுவதாகவோ எந்தப் பிரச்னையும் எழவில்லை.

சாமியார்களிடம் மோத விடுவதா?
அதை ஏன் அபகரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரிய வில்லை. பகுத்தறிவு இயக்கத்தின் கருத்துகளை, பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களைப் பெரும்பகுதி எடுத்துக் கூறுபவர் விவேகானந்தர் என்கிறபோது அவரிடம் நாங்கள் ஏன் விரோதம் கொள்ள வேண்டும்? தமிழ் செம்மொழி மையத்துக்கு தாற்காலிகமாக இடம் தேடியபோது, ஏதேதோ கதை கட்டி, அது பலிக்காத காரணத்தால் எங்களை சாமியார்களுடன் மோதவிடுவதற்காக சில காரி யங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சாமியார்களிடம் மோதவிட்டாலும், மாமியார்களிடம் மோதவிட்டாலும் நாங்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை.

மூட நம்பிக்கைகளை சாய்த்தவர்:
விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தியவர். புகை பிடித்தவர். மனம் சுத்தமாக இருந்தால் இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கத்தோடு செயல்பட்டவர்.
கட்டடத்தை எடுக்கப் போவதில்லை என்றபோதிலும் விவேகானந்தர் குறித்து எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக இடம் கொடுத்தோம்.
அப்படிப்பட்ட விவேகானந்தரின் பெயரால் இருக்கிற மண்டபத்தை இடிக்க யாரும் விரும்பவில்லை.

நினைக்கவும் இல்லை. அதற்காக அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை.
ரூ. ஆயிரம் குத்தகை:1897-ம் ஆண்டில் 9 நாட்கள் விவேகானந்தர் தங்கி சொற்பொழிவுகள் நிகழ்த்திய இடம் என்பதால், அதன் நினைவாக அந்த இல்லத்தை சென்னை ராமகி ருஷ்ண மடத்திடம் ஒப்படைக்கு மாறு மடத்தின் தலைவர் அரசிடம் கோரிக்கை வைத்தார்.

அதன்படி 27,546 சதுர அடி பரப்ப ளவு கொண்ட அந்த இடம் 1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி, சில நிபந் தனைகளுடன் ராமகிருஷ்ண மடத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகைத் தொகை ஆண்டுக்கு ரூ. ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன் பிறகு, விவேகானந்தர் இல்லத்துக்கு நுழைவு வாயில் இல்லை என்று கூறி, அந்த இல்லத்தின் முன்பு உள்ள 8 கிரவுண்ட் 1928 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை குத்த கைக்கு அளிக்கும்படி ராமகிருஷ்ண மடம் கோரியது.
அதையும் திமுக அரசு பரிசீலனை செய்து 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் 1998-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி மூன்று ஆண்டு குத்தகைக்கு விட் டது.

இந்த இல்லத்தை 30 ஆண்டு குத்த கைக்குத் தர வேண்டும் என்று ராமகி ருஷ்ண மடம் கோரிக்கை வைத்த போது "அமைச்சரவைக் கூட்டத்தில் தான் அதுபற்றி முடிவு செய்ய வேண் டும்' என்றேன். விவேகானந்தர் இல் லத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 கோடிக் கும் மேல் என்பதால் சலுகை குத்த கையாக மாதம் ஒன்றுக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் வீதம் 10 ஆண்டு களுக்கு 2000-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி குத்தகைக்கு விடப்பட்டது.

சாதுக்கள் சவால் விடக் கூடாது: "அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம்; முறைப்படிதான் நடக்கிறோம்' என்று அந்த மடத்தின் பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக்கிறார்.

நான் அந்த சவால்களுக்கு எல்லாம் பயப்படவில்லை. சாதுக்கள் சவால் விடுகிற அளவுக்கு வரக் கூடாது.

அது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் கொள்கைக்கு விரோதமானது.
இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது? குமரி முனையில் அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து , இங்கே விவேகானந்தர் மண்டபத்தை போஷித்து பாதுகாத்து வருகிற அரசைப் பார்த்து சவால் விடுவது நல்ல தல்ல.
சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான
பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
"பாலாறு இல்லத்தில்' செம் மொழி மையம்: தமிழ் செம்மொழி மையம், தாற்காலிகமாக அதே காம ராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.

No comments: