மடு தேவாலயப் பகுதியில் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருப்பதனால் மடு தேவாலயத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டுள்ளன என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,மடு பிரதேசத்திற்குத் தெற்காக 600 மீற்றருக்கு அப்பாலும், வடக்கிற்கும் கிழக்கிற்கும் தலா இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் படையினர் நிலை கொண்டுள்ளனர். மேற்கில் மடு தேவாலயம் இருப்பதனால் படையினர் அந்தப் பகுதியில் நிலைகொள்ளவில்லை.
இதேவேளை, வவுனியா, வெலிஓயா, முகமாலை, மன்னார் ஆகிய பகுதிகளிலும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் நேற்றும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் போது எட்டுப் புலிகள் கொல்லப்பட்டதுடன், பெருந்தொகையான ஆயுதங்களும் தொலைத்தொடர்புக் கருவிகளும் மீட்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment