மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினுள் இருந்த முறுகல் நிலை முற்றி வெடிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுடன் தொடங்கிய உள்முரண்பாடு தற்போது கிழக்கு மாகாணசபை தேர்தலுடன் வலுவடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கருணாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மௌனகுருசாமி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு மீண்டும் மட்டக்களப்பு வந்துள்ளார். இந் நிலையில் அவரை கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென பிள்ளையான் குழுவின் மற்றொரு சாரார் கேட்டுள்ளனர்.
இதனை பிள்ளையான் முற்றாக மறுத்துள்ளதுடன் இது தொடர்பில் எவராவது செயற்பட்டால் கொல்லப்படுவீர்கள் என எச்சரித்துள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுக்கு கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மேயர் பதவியில் பிள்ளையானுடன் முரண்பட்ட நிலையில் இருந்த பிரதீப் மாஸ்டரும் மௌனகுருசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த அவாகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நேற்று முன்தினம் பிள்ளையான்குழுவின் வாழைச்சேனை பிரிவுக்கான தேர்தல் பிரசார பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த க.சுதர்சன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதும் இந்த முரண்பாட்டின் முதல் வடிவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கமாகாணசபை தேர்தலலோடு பிள்ளையான் குழு இரண்டாக பிளவுபடக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment