மடு பகுதி இராணுவ மயமாவதை நிறுத்துங்கள் - கத்தோலிக்க ஆயர் மன்றம் வேண்டுகோள்
மன்னார் மடு மாதா தேவாலயப் பகுதியில் இடம்பெறும் மோதல் சம்பவங்களை உடனடியாக நிறுத்தி, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் அங்கிருந்து வெளியேற வேண்டுமென இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மடு தேவாலயப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும், மடுப் பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ முன்நகர்வுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment