கிழக்கு மாகாணசபைத் தேர்தலால் யாருக்கு நன்மையோ, இல்லையோ சோதிடர்களுக்கு மட்டும் "நல்ல காலம்" என்று சொன்னால் நம்புவீர்களா?
இன்னும் ஒரு சில தினங்களில் ராகு கேது மாற்றம் இடம்பெறுவதாக செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து கொழும்பின் பிரபல சோதிடர்களைத் தமது இல்லங்களுக்கு அழைத்திருக்கும் அரசியல்வாதிகள் சோதிடம் பார்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தேர்தல் பிரசாரப் பணியை எப்போது ஆரம்பிக்கலாம், எந்த நிற உடையில் செல்லலாம், வீட்டை விட்டு வெளியேறும் நேரம் உட்பட்ட இன்னோரன்ன கேள்விகளை அரசியல் பிரமுகர்கள் சோதிடர்களிடம் துருவித் துருவிக் கேட்கின்றனர். பெரும்பாலும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் ஆரூடம் பார்ப்பதால் சோதிடர்கள் காட்டில் அடைமழை.
எல்லாவற்றையும் விட "கூடாத காலம்" அரசியல்வாதிக்கு இருக்குமாயின் தேர்தல் பிரசாரப் பணிக்கு முன்னர் அதற்குப் பரிகாரம் செய்யவேண்டும். இப்படிப் பரிகாரம் செய்யவேண்டியிருப்பதால் சோதிடர்மார் சற்று வேலைப்பளுவுடன் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment