Saturday, April 26, 2008

மலேசிய மன்னர் மறுப்பு

மலேசியாவில் கைது செய்யப்பட்ட இந்து உரிமைகள் இயக்கத் தலைவர்கள் 5 பேரை விடுதலை செய்வதற்கு மன்னர் மறுத்துள்ளார்.
இதனால், அவர்கள் அனைவரும் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பரில் இந்திய வம்சாவளியினர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை இந்து உரிமைகள் இயக்கம் (இந்த்ராவ்) முன்னின்று நடத்தியது. இப் போராட்டம் தொடர்பாக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தலைவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் 5 பேரும் மன்னரிடம் மேன்முறையீடு செய்தனர்.

ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: