அட்டன் டிக்கோயா பட்டல்கலை எனும் தோட்டத்தைச்சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.23 வயதான இவரின் பெயர் க.தெய்வமலர் என்பதாகும். இவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடமையாற்றும் வீட்டில் இருந்து இன்று தகவல் கிடைத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தமது மகளுக்கு பிரச்சினைகள் ஒன்றும் கிடையாது என்றும் இம்மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தெய்வமலர் 25.04.2007 அன்று பட்டல்கலை தோட்டத்தைச்சேர்ந்த உப முகவர் ஒருவரின் மூலமே சவுதி பயணமாகியுள்ளார்.கொழும்பிலுள்ள வேலை வாய்ப்பு பணியகத்தின் மூலம் தெய்வமலர் இறந்த விடயம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் தற்போது அங்கு சென்றுள்ளனர்.
Wednesday, April 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment