வவுனியாவில் இளம் பெண்கள் காணாமல் போவது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இப்பெண்கள் காதல் தொடர்பு காரணமாக வீட்டை விட்டு சென்றுள்ளதாகக் கண்டறியப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16, 19 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேசத்தில் இருந்து 3 இளம் பெண்கள் வரையில் காணாமல் போயிருப்பதாக பொலிஸாருக்கும் மனித உரிமைகள் ஆணைக்கு ழுவினருக்கும் ?றைப்பாடு செய்யப்பட் டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், இந்தப் பெண்கள் காதல் தொடர்பு காரணமாகவே வீடுகளை விட்டுச் சென்றிருப்பதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் வவுனியா மாவட்ட நீதிமன்றத் திற்குத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு சென்றவர்களில் ஒருவர் பதுளை பகுதியில் இருப்பதாகத் தகவல் எட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ள னர்.
எப்படியிருப்பினும் இளம் பெண்கள் காணாமல் போயிருப்பது தொடர்பாக விசார ணைகள் நடத்தி அவர்கள் உண்மையாகவே காதல் தொடர்பு காரணமாகத்தான் வீடுகளை விட்டுச் சென்றுள்ளார்களா அல்லது கடத்தப்பட்டிருக்கின்றார்களா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment