சேத்தியாத்தோப்பு: மூன்று வயது குழந்தையை கற்பழித்த காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பீட்டர். இவரது மனைவி லதா. இவர்களது மகள் பிரசில்லா( 3). கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்லும் நாட்களில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேவசித்து மகன் ஷேக்ஸ்பியர் பாபு (25). என்பவரிடம் தங்கள் மகளை விட்டுச் செல்வர். ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவுடன் விளையாடிக் கொண்டிருப்பார். நேற்று முன்தினம் ஷேக்ஸ்பியர் பாபு குழந்தை பிரசில்லாவை வீட்டிற்கு துõக்கிச் சென்று சிறிது நேரம் விளையாடினார். பின்னர் குழந்தையை கற்பழித்துள்ளார்.
மாலை வீடு திரும்பிய பெற்றோர்களிடம் குழந்தை அழுது கொண்டே கூறியுள்ளது. இது குறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீசார் வழக்கு பதிந்து குழந்தையை கற்பழித்த ஷேக்ஸ்பியர் பாபுவை கைது செய்து காட்டுமன்னார் கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குழந்தை பிரசில்லா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment