8வயது சிறுமி அவருடைய 22 வயதான கணவருக்கும் அவருடைய தந்தையாருக்கும் எதிராக யேமன் தலைநகர் ஸனாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அந்த சிறுமிக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பினால் மிகவும் சந்தோசமடைந்த அந்த சிறுமி கூறுகையில் " எனிமேல் எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் விடுதலை அடைந்து விட்டேன். எனி என்னால் பாடசாலைக்கு செல்லமுடியும். என் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடமுடியும்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் "சுமார் 2½ மாதங்களுக்கு முன்னர் எனது தந்தையார் ஒரு 22வயது இளைஞனுக்கு என்னை மணமுடித்து கொடுப்பதாக அந்த இளைஞனுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார். அப்போது எனக்கு என் தந்தை கூறியது யாதெனில் "நான் 18 வயது வரை என் பெற்றோர்களுடன் இருக்கலாம். அதன் பின்னர் தான் நான் எனது கணவருடன் போய் சேர்ந்து வாழவேண்டும்" என்று தெரிவித்தார். நானும் எனது தந்தையாரின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு ஒரு வாரத்தின் பின்னர் என் தந்தையார் என்னை அந்த இளைஞனுடன் போய் சேர்ந்து வாழும்படி என்னை கட்டாயப்படுத்தி என்னை அந்த இளைஞனின் வீட்டிற்க்கு அனுப்பிவைத்தார். நானும் தந்தையாருக்கு பயந்து அங்கு போய் வாழ முடிவுசெய்து அங்கு சென்றேன். அங்கு சென்ற நாள் முதல் என்னை எனது கணவன் சித்திரவதை செய்து என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். அந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவே நான் விவாகரத்துகேட்டு விண்ணப்பித்தேன்" என்று கூறினார்.
இதனால் என் தந்தையார் என்மீது மிகவும் வெறுப்பாக உள்ளபடியால் நான் எனது தாய் வழி மாமாவின் வீட்டில் போய் இருப்பேன் என்ரு தெரிவித்தார்.
இவருக்காக வாதாடிய வக்கீல் தெரிவிக்கையில் "இப்படியான சம்பவங்கள் இங்கே அதிகமாக நடக்கின்றன. ஆனால் இதைப்போல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன" என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment