Wednesday, April 16, 2008

8வயது சிறுமி விவாகரத்து கோருகிறார்

8 வயது சிறுமி Nojoud Muhammed Nasser


யேமன் (Yemen) நாட்டில் Nojoud Muhammed Nasser என்ற 8 வயது சிறுமிக்கு அவரின் தந்தையார் 22 வயதான Faez Ali Thamer என்பவருடன் பலவந்தமாக திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த 22 வயது கணவன் இந்த சிறுமியை விளையாட அனுமதிக்காமல் அடிக்கடி பாலியல் தொடர்புக்கு கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்துள்ளார். இச்சித்திரவதையின் கொடூரத்தை இச்சிறுமி அவரின் பெற்றோரிடம் முறையிட்டு தன்னைக்காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தையாரும் அச்சிறுமியை அடித்துள்ளார். அத்துடன் அந்த தந்தையார் "நான் இதில் எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் நீயே கோர்ட்டிற்கு சென்று வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றுக்கொள்" என்று இலவச அட்வைஸ் கூறியுள்ளார்.

சிறுமியின் கணவன் (இடது) சிறுமியின் தந்தையார் (வலது)

அச்சிறுமி அவருக்கு தெரிந்தவர்களின் உதவியுடன் யேமன் தலநகரான ஸனா Sanaa வில் உள்ள நீதிமன்றில் தனக்கு விவாகரத்து பெற்றுத்தந்து தன்னை ஒரு அமைதியான வாழ்க்கை வாழ விடும்படி கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுமி அவருடைய வழக்கறிஞருடன் (Shatha Mohammed Nasser)

No comments: