Friday, April 25, 2008

அமெரிக்க உதவியை நாடும் தலாய் லாமா

திபெத் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அமெரிக்கா உதவ வேண்டு ம் என்று தலாய் லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.அண்மையில் தன்னை சந்தித்த திபெத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பௌலாவிடம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தலாய் லாமாவை சந்தித்துப் பேசிய விவரங்களை பௌலா, வாஷிங்டனில் வெளியிட்ட போது இதனை தெரிவித்தார்.திபெத் பிரச்னை தொடர்பாக தலாய் லாமாவுடன் சீனத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இருதரப்பு பேச்சுவார்த் தையை விரைவில் தொடங்க சீனத் தலைவர்களிடம் அமெ ரிக்கா வலியுறுத்தும்.

திபெத் மக்களுக்கு மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும்.கலவரத்தை கட்டுப்படுத்த தலாய் லாமாவால் மட்டுமே முடியும். எனவே அவரிடம் சீனத் தலைவர்கள் எவ்வித நிபந் தனையும் இன்றி பேச்சுவார்த் தையை தொடங்க வேண்டும் என்று பௌலா தெரிவித்துள்ளார்.

திபெத் கலவரத்தில் இதுவரை 150 -க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித் துள்ளன. ஆனால் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

No comments: