Tuesday, April 29, 2008

காலம் தாழ்த்திய நினைவுத்தூபி

நாடாளுமன்ற வளாகத்தினுள் இந்தியச் சிப்பாய்களின் தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நிர்மாணிக்கப்படும் நினைவுத்தூபி விரைவில் திரை நீக்கமாகும்.

இலங்கையில், விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்ட வேளை உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக பாராளுமன்ற வளாகத்தினுள் அமைக்கப்பட்டுவரும் நினைவுத்தூபி வெகு விரைவில் திறந்துவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் 22 ஆம் திகதி அல்லது சார்க் உச்சி மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இது திறந்துவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த நுட்பங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் நினைவுத்தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இலங்கைக் கடற்படை இதனை நிர்மாணிக்கும் பொறுப்பை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: