Tuesday, April 29, 2008

நடிகை சுலக்ஷனாவை மிரட்டுகிறாராம் பைனான்சியர்

அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக பைனான்சியர் மீது நடிகை சுலக்ஷனா, போலீஸில் புகார் செய்துள்ளார்.
சென்னை பாலவாக்கம் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்த வர் நடிகை சுலக்ஷனா. இவர் "தூங்காதே தம்பி தூங்காதே', "சிந்து பைரவி', படங்களில் நடித்தவர்.
இவர் வடபழனியைச் சேர்ந்த பைனான்சியர் மாடசாமியிடம், கடந்த ஆண்டு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந் தார். இதுவரை வட்டியுடன் சேர்த்து ரூ.1.20 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத் துவிட்டார்.
இதற்கிடையில் பைனான் சியர் மாடசாமி வட்டியாக மேலும் ரூ. 1.80 லட்சம் பணத்தைக் கேட்டு சுலக்ஷ னாவை மிரட்டுவதாகப் போலீஸில் புகார் தெரிவித் துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரிக்கும்படி, அடையாறு துணை கமிஷனருக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.

No comments: