தலாசி: அமெரிக்கா, புளோரிடா நகரில் , மாணவர்கள் ஜட்டி தெரிய பேன்ட் அணிந்து இருந்தால், தண்டனை வழங்குவதற்கான மசோதா, செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகரிகம் முற்றிப்போய் உள்ள அமெரிக்காவில், "பேஷன்' என்ற பெயரில் இளைய தலைமுறை யினர், அரைகுறை ஆடைகளை அணிகின்றனர். தற்போது, ஜட்டி தெரிய பேன்ட் அணிந்து வருகின்றனர். கேட்டால், "பேஷன்' என்று கூறுகின்றனர்.இதற்கு தடை விதித்து, பல நகரங்களில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புளோரிடா நகர செனட் சபையில், இதற்கான மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. முதல் முறையாக இந்த தவறை செய்பவர்கள், பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர். தொடர்ந்து இதே தவறை செய்தால், 60 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்படும்.
பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நிறைவேறினால் சட்டமாக உருவெடுக்கும்.மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்பது பள்ளிகளில் கட்டாயம் கிடையாது. மேலும், தங்களது குழந்தைகள், எப்படி உடை அணிந்து செல்கின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது இல்லை. இதுவே, பிரச்னைக்குகாரணம் என்பது பலரது கருத்து. "பேஷன்' உடைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், "சட்டம் கொண்டு வருவது அவசியம் இல்லை, இதை தடை செய்ய வேண்டியது, கல்வித்துறையும், பெற்றோரும் தான்' என, அவர்கள் கூறுகின்றனர்.கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment