ஸ்டாக்ஹோம்: விபசாரத்தை கட்டுப்படுத்துவதற்காக ஒன்பது ஆண்டுக்கு முன், சுவீடன் கொண்டு வந்த சட்டத்தை பல நாடுகளும், கிண்டல் செய்தன. இப்போது அதே சட்டத்தை, தங்கள் நாடுகளிலும் கொண்டுவர, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. சில நாடுகளில் விபசாரம், சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; சில நாடுகளில் விபசாரத்தை கட்டுப்படுத்த, சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்படி கொண்டுவரப்பட்ட சட்டங்கள், விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள், புரோக்கர்களை, உதவியாளர்களை தண்டிக்க மட்டும் தான் வகைசெய்கிறது. விபசாரத்தில் ஈடுபடும் ஆண்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.ஆனால், இதற்கு நேர் மாறாக, ஒன்பது ஆண்டுக்கு முன் சுவீடனில், புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அங்கு விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் தண்டிக்கப்படுவது இல்லை; சமூகத்தில் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களாகவும், பாதிக்கப்படுவோராகவும் கருதப்பட்டு, மன்னிக்கப்படுகின்றனர்.
ஆனால், அவர்களை விபசாரத்துக்கு துõண்டியவர்களாக கருதப்பட்டு, இதில் ஈடுபடும் ஆண்கள், புரோக்கர் கள், உதவியாளர்கள் தண்டிக்கப்படுகின்றனர். விபசாரியிடம் அந்தரங்க உறவு வைக்கும் ஆண்களுக்கு, அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இச்சட்டத்தை சுவீடன் அரசு கொண்டு வந்த போது, சர்வதேச அளவில், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இச்சட்டத்தை பல்வேறு நாடுகளும் கிண்டலும், கேலியும் செய்தன.ஆனால், சமீபத்தில் அமெரிக்காவின், நியூயார்க் முன்னாள் கவர்னர் எலியட் ஸ்பிட்சர், விபசார வழக்கில் சிக்கி, பதவியிழந்தது, பல்வேறு நாடுகள் மத்தியிலும் மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்களின் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் விபசாரிகள் உருவாக்கப்படுகின்றனர்; விபசாரம் தொழிலாக மாறுகிறது என்ற உண்மையை உணர்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து, சுவீடன் நாட்டைப் போலவே, தாங்களும் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, நார்வே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment