Saturday, April 26, 2008

மக்கள் தொலைக்காட்சியில் ரஷிய திரைப்படங்கள்

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப் பான ஈரானிய திரைப்படங்களுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பையடுத்து அந்த தொலைக்காட்சி ரஷிய திரைப்ப டங்களை ஒளிபரப்புகிறது.
இதுகுறித்து மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் கார்மல் கூறியதாவது: இந்தியாவிலிருக்கும் ரஷியர்கள் இந்த ஆண்டை "ரஷிய ஆண்டாக' கொண்டா டுகிறார்கள். அதனால் ரஷிய கலாசார மையத்தின் ஒத்துழைப்போடு புகழ் பெற்ற ரஷிய திரைப்படங்களை ஒளிப ரப்ப முடிவுசெய்துள்ளோம். அதன் முதல் கட்டமாக வரும் ஏப்.27-ம் தேதி "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' என்ற திரைப்படத்தை தமிழ் மொழிபெயர்ப்பு வாசகங்களுடன் ஒளிபரப்புகிறோம்.

தொடர்ந்து மாதம்தோறும் இரண்டு ரஷிய திரைப்படங்களை ஒளிபரப்புகி றோம் என்றார்.
ரஷிய இயக்குநர் ஸ்டேனிஷ்லா ரோஸ்டோஸ்கி இயக்கியுள்ள "த டான்ஸ் ஹியர் ஆர் கொயட்' திரைப்ப டம், இரண்டாம் உலகப் போரின் பின்ன ணியைக் கதைக் களமாகக் கொண்டது.

இதில் போர் வீராங்கனைகளாகவும் குடும்பப் பெண்களாகவும் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தவித்த பெண் களின் நிலை திறம்பட சித்திரிக்கப்பட் டுள்ளது. போர் பற்றிய திரைப்படம் என்றாலே எந்த நேரமும் குண்டு சத்தம் கேட்கும் என்ற பொதுவான எண் ணத்தை உடைத்தெறியும் இந்தப் படம் ஏப்.27-ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒளிப ரப்பாகிறது.

No comments: