Saturday, April 26, 2008

இரண்டு தரப்பினரும் இரண்டு கிலோமீற்றர் தள்ளி நில்லுங்கோ

இரண்டு தரப்பினரும் இரண்டு கிலோமீற்றர் தொலைவிற்கு சென்றால் மாத்திரமே மடு அன்னையின் சொரூபம் மீண்டும் எடுத்துவரப்படும்

கத்தோலிக்க தேவாலய குழுவினர் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர். மடு தேவாலய பகுதிக்குள் உள்ளிடுவதில்லை என்ற உறுதிமொழியை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் கூறுகையில். இரண்டு தரப்பும் சுமார் 2 கிலோமீற்றர்களுக்கு அப்பால் தமது நிலைகளை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதிமொழி வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதுவரை தேவன்பிட்டியில் வைக்கப்பட்டுள்ள மடுமாதா சொரூபம் மீண்டும் தேவாலயத்திற்கு எடுத்துவரப்பமாட்டாது என்றும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்

No comments: