Friday, April 4, 2008

நாயின் பிரார்த்தனை

டோக்கியோ, மார்ச் 24: எஜமானர் கட்டளையிட்டதும் செய்தித்தாளை கொண்டு வந்து கொடுக்கும் நாய்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பெரும்பாலான நாய்கள் விளையாட்டாக பந்தை வீசினால் கொண்டு வந்து தருவதும் உண்டு.
.
ஆனால் ஜப்பானில் உள்ள புத்த மடாலயத்தில் வளர்க்கப்படும் நாய் ஒன்றோ பக்தர்களை போலவே தானும் பிரார்த்தனை செய்து வியப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.

அந்நாட்டில் ஒகினாவா எனும் நகரில் உள்ள மடாலயத்தில் இந்த நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. அங்கு வரும் பக்தர்கள் புத்தமத வழக்கப்படி கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்வது வழக்கம்.

நாளடைவில் இந்த நாயும் அவ்வாறே பிரார்த்தனை செய்ய தொடங்கி இருக்கிறது. இதில் என்ன விசேஷமென்றால் தனக்கு ஏதாவது தின்பண்டங்கள் தேவை என்றால் நாய் இப்படி பிரார்த்தனை செய்ய தொடங்கி விடுகிறதாம்.

இப்போது இந்த நாய் பிரார்த்தனை செய்வதை பார்ப்பதற்காக என்று கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதாம்.

No comments: