Friday, April 4, 2008

அம்மாவின் கொள்ளை பாடம்

சியோல், மார்ச் 23: பிள்ளைகளுக்கு தாய்மார்கள் பள்ளிப் பாடத்தை ஆர்வத்தோடு கற்றுக் கொடுப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம்.

ஆனால் தென் கொரியா அம்மணி ஒருவரோ தனது ஆறு வயது மகளுக்கு வங்கியில் கொள்ளை யடிக்க கற்றுக் கொடுத்திருக் கிறாராம்.

அந்த அம்மணி சொல்லி கொடுத்தபடி அவருடைய மகள் வங்கியின் பெட்டகத்திலிருந்த காசோலைகள் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொடுத்ததாம்.

கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சி பதிவாகி இருந்ததாம். சிறுமி வங்கிப் பணத்தை எடுப்பதை பார்த்து திடுக்கிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவருடைய அம்மா இதன் பின்னே இருந்த விஷயம் தெரிய வந்ததாம்.

ஆனால் அந்த அம்மணியோ மகளுக்கு தான் கொள்ளையடிக்க கற்றுக் கொடுக்கவில்லை என்று கூறி வருகிறாராம்.

No comments: