இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்: விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்க ளின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது.
ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. விவேகானந்தர் தமி ழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
Tuesday, April 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment