Tuesday, April 22, 2008

இடிக்கக் கூடாது: எஸ்.வி. சேகர்

விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையம் அமைக்க உள்ள அரசின் முடிவுக்கு பல் வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எஸ்.வி. சேகர் (மயிலாப் பூர் எம்.எல்.ஏ): விவேகா னந்தர் இல்லத்தை காலி செய்யச் சொல்லிவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கும் அரசின் முடிவு முற்றிலும் தவறானது.

தமிழ் செம்மொழி மையத்தை எங்கு வேண்டு மானாலும் அமைக்கலாம். விவேகானந்தர் இல் லத்தை, அவர் தங்கியிருந்த அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அமைக்க முடியாது.

கர்நாடகத்தைப் பின்பற்றி, தமிழக அரசும் விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்தி டம் ஒப்படைத்துவிட வேண்டும்.

எல். நடராஜன் (சமூக சேவகர், கே.கே.நகர்): கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உண்மையான கலாசார சின்னத்தை தி.மு.க. அரசு இடிக்கிறது.
ஓம் பிரகாஷ் ராய் (ஆசிரியர், அசாம்): விவே கானந்தர் இல்லம் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, ஆன்மிகத் தலமும் கூட. வெளி மாநிலங்கள், வெளிநாட்டுப் பயணிகளிடம்கூட இந்த இடம் பிரபலமாக உள்ளது. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

எஸ். மோகன் (சென்னை): அந்த செய்தியைப் பார்த்தது முதல் இதயம் முழுக்க வலியுடன் இந்த விவேகானந்தர் இல்லத்தில் அமர்ந்துள்ளேன். இந்த இடம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கோயில் போன்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருந்தேன். அப்போது, விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தவுடன் அந்த எண்ணம் நீங்கியது.

No comments: