"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்; ஆனால், "உள்ளே புதைந்திருக்கும் "செக்ஸ்' ஆசை, முகத்திலேயே தெரியும்' என்று கண்டுபிடித்துள்ளனர் பிரிட்டன் மனோதத்துவ நிபுணர்கள்.
லண்டனில் உள்ள தர்கம் பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர் லிண்டா பூத்ராய்டு தலைமையிலான குழுவினர் இதுபற்றி ஆராய்ந்தனர். அவர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருவரின் "செக்ஸ்' நாட்டம், அவர்களின் முகத்தை வைத்தே சொல்லி விடலாம். ஆண்களுக்கும், பெண்களுக் கும் இப்படி சில அம்சங் கள், அவர்களின் முகத்தில் அமைந்திருக் கின்றன. அதை வைத்தே, அவர்களின் "செக்ஸ்' ஈடுபாடு எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.
சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இருக்கும்; அவர்களுக்கு "செக்ஸ்' வாழ்க்கை என்பது குறிப்பிட்ட காலகட்டத்துடன் முடிந்துவிடும். சிலருக்கு வாழ்க்கையில் "செக்ஸ்' என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கும். அவர்களின் "செக்ஸ்' நாட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆண்களைப் பொறுத்தவரை, வட்டமான தாடை, நீண்ட மூக்கு, சிறிய கண்கள் உடைய பெரும்பாலோருக்கு "செக்ஸ்' தான் முக்கியமாக இருக்கும் என்றாலும், அன்பை காண்பிக்க தவற மாட்டார்கள். இதுபோல, பெண்களில் அகல கண்கள், முழு அளவிலான உதடுகள் இருந்தால் அவர்களுக்கு "செக்ஸ்' நாட்டம் அதிகமாக இருக்கும்.
தினமலர்

No comments:
Post a Comment