Tuesday, April 15, 2008

சிறுவன் நரபலி?

வடலூரில் 9 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் திங்கள்கி ழமை இறந்துகிடந்தார். இது நரபலியா அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் கும்பலின் கைவரிசையா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜாவின் மகன் அருண்குமார்(9). இச்சிறுவன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வடலூர் சத்தியஞான சபை அருகேவுள்ள தனது தாத்தா வீட் டிற்குச் செல்வதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் சிறுவன் அங்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் சிறுவ னைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திங்கள் கிழமை காலை வடலூர் சத்தியஞானசபை அருகேவுள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டியினுள் உள்ள தண்ணீரில் சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

கொலைசெய்யப்பட்ட சிறுவன், குடும்பத்தில் மூத்தமகன் என்பதோடு, சிறுவனின் தலைமுடியும் அறுக்கப்பட்ட இருப் பதால் நரபலிக்காக யாரேனும் கொலைச்செயலில் ஈடுபட்டி ருக்கிறார்களா அல்லது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் கும் பல் சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தி கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசார ணையைத் துவக்கியுள்ளனர்.

No comments: